Saturday 27 September 2014

Filled Under:

மனிதனுக்குள் ஒரு மிருகம் -மதன்


எல்லா மனிதர்களுக்குள்ளேயும் இருண்ட பகுதிகள் உண்டு. அதற்குள்ளே புகுந்து பார்ப்பதை நாம் தவிர்த்தால், நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தம்!.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பதுங்கியிருக்கும் மிருகத்தைப் புரிந்து கொண்டால்தான் அதைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மனோதத்துவ மேதை சிக்மன்ட் ஃப்ராய்டு எல்லா மனிதர்களுக்கு உள்ளேயும் வன்முறை உணர்வுகள் இருக்கிறது. எப்படிப்பட்ட மோசமான குற்றத்தையும் செய்யத் தூண்டும் வெறி உணர்வு அவனுடைய ஆழ்மனதில் தங்கியிருக்கிறது. ஓரளவுக்கு அதைக் கட்டுப்படுத்துவது சமூகக் கட்டுப்பாடும் சமுதாய சட்டதிட்டங்களும், பின்விளைவுகளும், குற்ற உணர்வும்தான்! என்கிறார்.

மொத்தத்தில் நாம் நல்லவர்களும் அல்ல... கேட்டவர்களும் அல்ல! வெளியே மனிதன், உள்ளே மிருகம் -இரண்டும் சேர்ந்த கலவைதான் நாம்!

இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜீ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது. தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவெ கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் பொவதோ கடலில். ஆரம்பம் முடிவில்லாத பெருங்கடல்.

-மதன்.

                                                 

0 comments:

Post a Comment